இது அரசின் கடமை! இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனை நிறுத்திய பிரித்தானியா
இஸ்ரேலுக்கான சில ஆயுத விற்பனை நிறுத்துவதாக பிரித்தானிய வெளியுறவு செயலாளர் அறிவித்துள்ளார்.
நிறுத்தப்பட்ட ஆயுத விற்பனை
பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி, இஸ்ரேலுக்கான சில ஆயுத விற்பனையை நிறுத்தி வைப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
பிரித்தானிய ஆயுதங்கள் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறுவதற்கான தெளிவான ஆபத்தை ஏற்றுமதி உரிமங்களுக்கான மறு ஆய்வு கண்டறிந்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார்.
அதன்படி, 350 உரிமங்களில் 30 உரிமங்கள் இடைநிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
காசாவில் நடைபெற்று வரும் போருக்கு மத்தியில் பிரித்தானியாவின் ஆயுத ஏற்றுமதி உரிமங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அரசின் கடமையாக உள்ளது என்றும் லாம்மி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் Israel Katz தெரிவித்த தகவலில், இந்த முடிவு ஹமாஸ் மற்றும் அதன் ஆதரவாளர் ஈரானுக்கு மிகவும் பிரச்சனைக்குரிய செய்தியை அனுப்பியுள்ளது என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |