காசாவில் மீட்கப்பட்ட 6 பிணைக் கைதிகளின் இறுதி செய்தி! வீடியோ வெளியிட்ட ஹமாஸ்
காசா சுரங்கப்பாதையில் கடைசியாக கண்டுபிடிக்கப்பட்ட 6 பிணைக் கைதிகளின் இறுதி நேர வீடியோவை ஹமாஸ் படையினர் வெளியிட்டுள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட பிணைக் கைதிகள்
காசா சுரங்கப்பாதையில் 2 தினங்களுக்கு முன்பு Carmel Gat, Eden Yerushalmi, Hersh Goldberg-Polin, Alexander Lobanov, Almog Sarusi, மற்றும் Ori Danino ஆகிய 6 பிணைக் கைதிகள் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
சனிக்கிழமை தெற்கு காசா பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் இஸ்ரேலிய படைகள் ஹமாஸ் படையினரை அடைவதற்கு சற்று முன்னதாக இந்த பிணைக் கைதிகள் பயங்கரமான முறையில் கொல்லப்பட்டு இருப்பதாக IDF செய்தி தொடர்பாளர் Daniel Hagari தெரிவித்துள்ளார்.
இறுதி நேர காட்சிகள்
இந்நிலையில், காசா சுரங்கப்பாதையில் கடைசியாக கண்டுபிடிக்கப்பட்ட 6 பிணைக் கைதிகளின் மனதை வருத்துக்கிற இறுதி நேர பிரச்சார வீடியோவை ஹமாஸ் படையினர் வெளியிட்டுள்ளனர்.
ஹமாஸின் டெலிகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், பிணைகள் கருப்பு வெள்ளை பின்னணியில் காணப்படுகின்றனர்.
காசாவின் ரஃபா பகுதிக்கு கீழ் உள்ள சுரங்கப்பாதையில் 6 பிணைக் கைதிகள் கண்டுபிடிக்கப்பட்ட அடுத்த நாள் வெளியான இந்த வீடியோவின் கீழ், “நாங்கள் இவர்களின் கடைசி செய்திகளை காண்பிக்கிறோம்” என தலைப்பிடப்பட்டு இருந்தது.
🇵🇸🇮🇱 Al-Qassam Brigades released a video showing the six recently recovered deceased hostages teasing upcoming footage of their last messages:
— TabZ (@TabZLIVE) September 2, 2024
"Hours & We Will Show Their Last Messages" pic.twitter.com/HmiRIWS1Lo
பாக்ஸ் செய்திகளின் தகவல்படி, இஸ்ரேலிய அமெரிக்கரான Goldberg-Polin கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி Re’im இசை திருவிழாவில் நடந்த கைக்குண்டு தாக்குதலின் போது தன்னுடைய கையின் ஒரு பகுதியை இழந்து இருப்பது பார்க்க முடிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |