கோவிலுக்கு சென்று திரும்பும் போது நேர்ந்த சோகம் - 9 பக்தர்கள் பரிதாப பலி
கோவிலுக்கு சென்று திரும்பும் போது ஏற்பட்ட பேருந்து விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திரா பேருந்து விபத்து
ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த 35 பேர், பத்ராசலம் பகுதியில் உள்ள ராமர் கோயிலுக்கு தனியார் பேருந்து மூலம் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர்.

அங்கே தரிசனம் முடித்து விட்டு, அடுத்ததாக அன்னாவரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அதிகாலை 4 மணியளவில், துளசிபகாலு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
9 பேர் உயிரிழப்பு
இதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், காயமடைந்த 22 பேர் சிகிச்சைக்காக பத்ராசலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாகனம் கூர்மையான வளைவில் செல்லும்போது, சாலையை விட்டு விலகி செங்குத்தான சரிவில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடத்தில் கடும் மூடுபனி காரணமாக பேருந்து ஓட்டுநர் வளைவைப் பார்க்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த துயர சம்பவத்திற்கு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Pained by the loss of lives due to a bus mishap in the Alluri Sitharama Raju district of Andhra Pradesh. My thoughts are with the affected people and their families during this difficult time. Praying for the speedy recovery of the injured.
— PMO India (@PMOIndia) December 12, 2025
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF…
இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |