காவல்நிலையத்தில் வெடித்து சிதறிய பயங்கரவாதிகளின் வெடிபொருள் - 9 பேர் உயிரிழப்பு
பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருள், காவல்நிலையத்தில் வெடித்து சிதறியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
பயங்கரவாதிகளிடம் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்
கடந்த நவம்பர் 10 ஆம் திகதி டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர்.
இது சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலம், பரிதாபத்தில் 4 மருத்துவர்கள் உட்பட 8 பேர் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து, சுமார் 360 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த பரிதாபத் குழுவினர், டெல்லி குண்டு வெடிப்பை நிகழ்த்திய மருத்துவர் உமர் முகமதுவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள்.
அந்த வெடிபொருட்களில் ஒரு பகுதி, ஆய்வுக்காக தடயவியல் சோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
9 பேர் உயிரிழப்பு
மீதமுள்ள வெடிபொருட்கள் ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 11:20 மணியளவில் திடீரென அந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறியது. இதில் காவல்நிலையமும், அங்கிருந்த வாகனங்களும் எரிந்து சேதமாகின.
இந்த விபத்தில் காவலர்கள், அரசு அதிகாரிகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வெடி விபத்தில், சிலரின் உடல்கள் 300மீட்டர் தொலைவிற்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. மேலும், 15 கிமீ தூரம் வரை வெடி சத்தம் கேட்டுள்ளது.
"வெடிகுண்டுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளப்பட்டதாகவும், எனினும், தற்செயலாக இந்த வெடிப்பு நிகழ்ந்ததாகவும், இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து வேறு எந்த ஊகங்களும் தேவையற்றது.” என ஜம்மு காஷ்மீர் டிஜிபி நளின் பிரபாத் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |