ஆப்பிரிக்க நாடொன்றில் ராணுவ கிடங்கில் பயங்கர வெடிவிபத்து! 9 பேர் பலியான பரிதாபம்
சாட் நாட்டில் ராணுவ வெடிபொருள் கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ராணுவ வெடிபொருள் கிடங்கு
மத்திய ஆப்பிரிக்க நாடான சாட்-யின் தலைநகர் ஜமீனாவில் ராணுவ வெடிபொருள் கிடங்கு உள்ளது. இங்கு நேற்று இரவு திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
அரைமணி நேரத்திற்கும் மேலாக வெடிபொருட்கள் வெடித்ததில் அருகே இருந்த கட்டிடங்களும் குலுங்கின.
இந்த வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 46 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆழ்ந்த இரங்கல்
காயமடைந்த நபர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வெடிவிபத்திற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை.
அந்நாட்டின் ஜனாதிபதி மஹமத் டெபி (Mahamat Deby), இச்சம்பவம் குறித்த இரங்கல் பதிவில்,
''பாதிக்கப்பட்டவர்களின் ஆன்மா அமைதி பெற வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்'' என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |