இந்திய மாநிலம் ஒன்றில் மின்னல் தாக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
இந்திய மாநிலம் ஒன்றில் இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில் மின்னல் தாக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
9 பேர் உயிரிழப்பு
இந்திய மாநிலமான ஒடிசாவில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில் மின்னல் தாக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோராபுட், கட்டாக், கோர்த்தா, நயாகட், ஜாஜ்பூர், பாலேசோர் மற்றும் கஞ்சம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |