ரயிலில் தவறவிட்ட 9 சவரன் நகைகள்.., தூய்மை பணியாளரின் நெகிழ்ச்சி செயல்
விரைவு ரயிலில் தவறவிட்ட 9 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைக்க உதவிய தூய்மை பணியாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
நகை ஒப்படைப்பு
கடந்த 29-ம் திகதி இரவில், மைசூரிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 1-வது நடைமேடைக்கு சதாப்தி விரைவு ரயில் வந்தது. பின்னர், ரயிலில் இருந்து பயணிகள் இறங்கியதும் சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, கார்த்திக் என்ற தூய்மை பணியாளர் இ-1 பெட்டியில் இருக்கை எண் 1-ல் சிறிய கைப்பை இருந்ததை பார்த்துள்ளார்.
அதனை எடுத்து பார்த்ததும் உள்ளே சுமார் 9 சவரன் எடை கொண்ட, 2 வளையல்கள், கம்மல், ஆரம், நெக்லஸ் ஆகிய தங்க நகைகள் இருந்துள்ளது.
பின்னர், அந்த கைப்பையை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலைய தலைமைக் காவலர் சிவப்பிரியாவிடம் தூய்மை பணியாளர் ஒப்படைத்துள்ளார்.
இதையடுத்து, நகை உரிமையாளர் தொடர்பாக ரயில்வே காவல் ஆய்வாளர் தலைமையிலான பொலிஸார் விசாரித்து வந்தனர். அப்போது, சென்னையில் உள்ள பல்லவரத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவருக்கு சொந்தமான ஆபரணங்கள் என்று தெரியவந்தது.
ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி பெங்களூருவில் இருந்து சென்னைக்கு சதாப்தி ரயிலில் பயணித்தபோது நகையை தவறவிட்டனர். பின்னர், இது தொடர்பாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதையடுத்து, நகைகள் அடங்கிய பையை உரிமையாளர் ஸ்ரீகாந்த்திடம் ரயில்வே பொலிஸார் ஒப்படைத்தனர். இதில், நகைகள் அடங்கிய பையை எடுத்துக்கொடுத்து உதவிய தூய்மை பணியாளருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |