ஒரு முக்கோணக் காதல்... ஒரு சிறுவன் பலி: ஒன்பது பேர் கைது
அமெரிக்காவில் ஒரு முக்கோணக் காதலின் விளைவாக சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான், ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள், பத்தாவது நபர் சரணடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு சிறுவன் பலி
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் ட்ரே டீன் ரைட் (Trey Dean Wright, 16) என்னும் சிறுவன் கொல்லப்பட்ட வழக்கு பரபரப்பை உருவாக்கியுள்ளது.
ஜூன் மாதம் 24ஆம் திகதி, துப்பாக்கிக்குண்டுகளால் சல்லடையாக துளைக்கப்பட்ட நிலையில், ரைட் என்னும் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
பின்னர், ரைட் கொலை தொடர்பாக, டேவன் ஸ்காட் ராப்பர் (Devan Scott Raper, 19) என்னும் இளைஞர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
ராப்பர், ஒரு இளம்பெண் தொடர்பில் எழுந்த வாக்குவாதம் காரணமாக ரைட்டை சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.
உண்மையில், ரைட் கொலைக்கு ராப்பர் மட்டும் காரணம் அல்ல, அவருடன் இணைந்து எட்டு பதின்மவயதினர் இணைந்து சதித்திட்டம் தீட்டியதாகவும், சிக்கவைத்ததாகவும், ரைட் கொல்லப்பட்டதை வீடியோ எடுத்ததாகவும் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரைட்டின் காதலியான கியான் கிஸ்டன்மேச்சர்தான் (Giann Kistenmacher, 17) ரைட்டை சந்திக்க ராப்பரை அழைத்துவந்துள்ளார்.
ராப்பரிடம் துப்பாக்கி இருந்தது கியானுக்குத் தெரியும் என்பதால் ரைட்டை கொல்ல அவரும் கூட்டு செய்தி செய்ததாக அவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆக, ஒரு முக்கோணக் காதல் ஒரு உயிரை பலிவாங்கிவிட்டது, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள், பத்தாவது நபர் சரணடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |