அமெரிக்க பெண்ணை திருமணம் செய்தது ஏன்? இந்திய இளைஞரின் அசத்தலான பதில்! வைரல்
அமெரிக்க பெண்ணை ஏன் திருமணம் செய்தேன் என இந்தியர் ஒருவர் கூறும் காணொளி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலாகும் இந்தியரின் பதில்
காண்டேஸ் என்ற அமெரிக்க பெண்ணை எதற்காக திருமணம் செய்து கொண்டேன் என அனிகேட் என்ற இந்திய இளைஞர் கூறும் காரணம் இணையத்தில் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
வீடியோ ஒன்றில், மனைவி காண்டேஸ் தனது கணவர் அனிகேட்-யிடம் என்னை ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள் என கேட்கிறாள். அதற்கு பதிலளித்த அனிகேட் முதலில் ஆசிரியாரக வேண்டும் என்ற உன்னுடைய லட்சியம் என்னை மிகவும் கவர்ந்தது.
அத்துடன் முதல் சந்திப்பில் காண்டேஸிடம் இருந்து கிடைத்த வரவேற்பும், அன்பும் தன்னை மிகவும் ஈர்த்தது, மேலும் அன்று இரவு நீங்கள் கூறிய அனைத்தும் என்னை நீங்கள் மனமார வரவேற்பதாக என்னை உணர வைத்தது.
அன்பைப் பொழிந்த குடும்பம்
நம்முடைய இருவரின் உறவை தாண்டி, உங்களுடைய குடும்பம் என அனிகேட் கூறியதை அடுத்து, காண்டேஸ் யார் என்னுடைய தந்தையா? என கேட்க, “ஆமாம்” அவர் மிகவும் நட்பானவர் மற்றும் அன்புடன் என்னை வரவேற்றார்.
முக்கியமாக, இப்படிப்பட்ட நல்ல குடும்பத்தில் என்னையும் இணைத்து கொள்ள வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.
இந்தியரின் இந்த பதில், இணையத்தில் வைரலாகி ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |