தென்னாப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட 9 பெண்கள் உடல்: தொடர் கொலையாளியின் செயலா?
South Africa 9 Women body Found dead in Johannesburg: ஜோகன்னஸ்பர்க் அருகில் 9 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட 9 பெண்கள் உடல்
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு வடக்கே 9 பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் மிகப்பெரிய அச்சத்தை அப்பகுதியை சுற்றியுள்ள பெண்களிடம் உருவாக்கியுள்ளது.
இரண்டு மாத இடைவெளிக்குள் மீட்கப்பட்ட இந்த உடல்களிடையே ஏதேனும் பொதுவான தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்னாப்பிரிக்க காவல்துறையின் தகவல்படி, சடலமாக மீட்கப்பட்ட பெண்கள் அனைவரும் 20 முதல் 38 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களில் பலரின் உடல்கள் ஆடை இன்றி நிர்வாணமாகவோ, பாதியளவு ஆடைகளுடனோ உடலில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

தொடர் கொலையாளியின் செயலா?
பாதிக்கப்பட்டவர்களின் வயது, சம்பவ இடங்கள் மற்றும் காலக்கெடு ஆகியவற்றில் உள்ள ஒற்றுமை இந்த கொலை சம்பவங்கள் தொடர் கொலையாளியின்(serial killer) செயலாக இருக்குமோ என்று காவல்துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இவை தொடர் கொலையாளியின் செயல் என்று யாரும் முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டாம் என்றும், இதில் தனித் தனி நபர்கள் ஈடுபட்டு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 17ம் திகதி நடந்த கொலை சம்பவத்தில் இளம் பெண் ஒருவர் கேபிள் டை மூலம் கட்டப்பட்டு நிர்வாணமான நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இதுவே கண்டெடுக்கப்பட்ட 9 உடல்களில் முதல் வழக்காகும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் காதலன் பொலிஸார் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.