சரணடந்த உக்ரைன் வீரர்களை சிறைக் காலணிகளுக்கு அனுப்பும் ரஷ்யா
மரியுபோல் இரும்பு ஆலையில் இருந்து வெளியேறி ரஷ்ய ராணுவத்திடம் சரணடந்த உக்ரைனிய ராணுவ வீரர்களில் 900 பேரை ரஷ்யாவின் சிறைக் காலனிகளுக்கு அனுப்பி வைத்து இருப்பதாக ரஷ்ய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைன் ரஷ்ய போர் மாதக்கணக்கில் நடைப்பெற்று கொண்டு இருக்கும் இந்த வேளையில், பலவார முற்றுகை மற்றும் எச்சரிக்கைகளுக்கு பிறகு மரியுபோலின் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் பதுங்கி இருந்த நூற்றுக்கணக்கான உக்ரைன் ராணுவ வீரர்கள் ரஷ்ய ராணுவத்திடம் சரணடந்தனர்.
இந்தநிலையில், இரும்பு ஆலையில் இருந்து வெளியேறி ரஷ்ய ராணுவத்திடம் சரணடைந்த 959 உக்ரைனிய ராணுவ வீரர்களில் 51 பேர் அவர்களது படுகாயம் காரணமாக மருத்துவமனைக்கும், மீதமுள்ள 908 உக்ரைனிய ராணுவ வீரர்கள் ரஷ்ய ராணுவத்தின் கட்டுபாட்டில் இருக்கும் ஒலெனிவ்கா( Olenivka) நகரின் சிறைக் காலணிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சிறைக் காலணிகளுக்கு அனுப்பட்டுள்ள உக்ரைனிய ராணுவ வீரர்கள் குற்றவாளிகளாக நடத்தப்படுவார்களாக அல்லது போர்க் கைதிகளாக நடத்தப்படுவார்களாக என்ற தெளிவான விளக்கத்தை ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, சரணடைந்த வீரர்கள் குறித்து உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்த தகவலில், பிடிபட்ட ராணுவ வீரர்களை மாற்றிக் கொள்ளும் நடைமுறையை செயல்படுத்தி வருவதாகவும், உக்ரைன் ஹீரோக்கள் விரைவாக மீட்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய தளபதிளை பதவியில் இருந்து நீக்கிய புடின்: பிரித்தானிய உளவுத்துறை தகவல்
மேலும் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையின் பதுங்கி குழாய்களுக்குள் இன்னமும் பதுங்கி இருக்கும் உக்ரைனிய ராணுவ வீரர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருவதாகவும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.