மொத்தமாக 9 ஆயிரம் உக்ரைனிய வீரர்கள்...ரஷ்யாவின் அத்துமீறலால் பலியான உயிர்கள்!
போர் நடவடிக்கையில் இதுவரை 9 ஆயிரம் உக்ரைனிய சேவையாளர்கள் உயிரிழப்பு.
45400 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்.
ரஷ்யாவின் போர் தாக்குதலில் இதுவரை 9 ஆயிரம் உக்ரைனிய சேவையாளர்கள் உயிரிழந்து இருப்பதாக உக்ரைனிய ஆயுதப் படையின் தலைமை தளபதி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் தொடங்கி இன்றுடன் 180 நாள்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் தற்போது உக்ரைனின் தென்கிழக்கு பகுதியில் மோதலானது தொடர்ந்து வருகிறது.
இந்த போர் தாக்குதலில் இதுவரை 45400 ரஷ்ய போர் வீரர்கள் உயிரிழந்து இருப்பதாக உக்ரைனின் தினசரி அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Almost 9 thousand Ukrainian servicemen died in the war with #Russia, - Valery Zaluzhny, Commander-in-Chief of the Armed Forces of #Ukraine. pic.twitter.com/KZ6iCJ3QAz
— NEXTA (@nexta_tv) August 22, 2022
இருப்பினும் அவற்றில் உக்ரைனிய தரப்பில் பலியான வீரர்களின் எண்ணிக்கை எதுவும் குறிப்பிடவில்லை.
ஆரம்பம் முதலே உக்ரைனிய வீரர்களின் உயிரிழப்பு குறித்த எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படாமலே இருந்தது.
இந்தநிலையில் ரஷ்யா முன்னெடுத்த இந்த போர் தாக்குதலில் இதுவரை 9 ஆயிரம் உக்ரைனிய சேவையாளர்கள் உயிரிழந்து இருப்பதாக உக்ரைன் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி வலேரி ஜலுஷ்னி(Valery Zaluzhny) தெரிவித்துள்ளார்.
#Russian losses according to the General Staff of the Armed Forces of #Ukraine. pic.twitter.com/n2OOwDcnHF
— NEXTA (@nexta_tv) August 22, 2022
கூடுதல் செய்திகளுக்கு: இந்திய அரசியல் தலைவர் மீது தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதி ரஷ்யாவில் கைது!
மேலும் இவற்றில் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து தங்கள் சேவைகளை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.