இஸ்ரேல் சிறையில் 95 பாலஸ்தீன கைதிகள் உயிரிழப்பு: மனித உரிமை அமைப்பின் பகீர் ஆய்வறிக்கை
கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேலிய சிறையில் பாலஸ்தீன கைதிகளின் மரணங்கள் அதிகரித்து இருப்பதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிகரித்த பாலஸ்தீன கைதிகள் உயிரிழப்பு
இஸ்ரேல் மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பொன்று(PHRI) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேலிய சிறையில் குறைந்தது 95 பாலஸ்தீன பிணைக் கைதிகள் மற்றும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டவர்கள் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் முன்னணி மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட இந்த அறிக்கையானது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உயிரிழப்புகளில் திட்டமிட்ட கொலைகள் மற்றும் மறைப்பு நடவடிக்கைகள் இருப்பதாகவும் மனித உரிமை அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
PHRI மேற்கொண்ட இந்த ஆய்வறிக்கை ஆனது, போர் தொடங்கிய அக்டோபர் 7, 2023 முதல் 2025 ஆகஸ்ட் 31ம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டது. போருக்கு முந்தைய 10 ஆண்டுகளில் 30 க்கும் குறைவான பாலஸ்தீன கைதிகளே இஸ்ரேலிய சிறையில் உயிரிழந்து இருப்பதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இஸ்ரேலிய தரப்பு பதில்
இந்த அறிக்கை தொடர்பாக பதிலளித்த இஸ்ரேல் சிறை சேவை(IPS), அனைத்து சட்டப்படியும், அதிகாரப்பூர்வ கண்காணிப்புகள் கீழும் தான் நடைபெறுவதாக தெரிவித்துள்ளது.

மேலும் சிறைக்குள் கைதிகளுக்கான மருத்துவ வசதி, சுகாதாரம், மற்றும் வாழ்க்கை நிலைமைகள் ஆகியவை தொழில்முறையில் பயிற்சி பெற்ற ஊழியர்கள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
அதே சமயம் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட புள்ளி விவரங்கள் குறித்த கேள்விகளுக்கு IPS பதிலளிக்க மறுத்துவிட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |