பிரித்தானியாவில் 96 வயது மூதாட்டிக்கு 18 மாத சிறை தண்டனை: எதற்கு தெரியுமா?
பிரித்தானியாவில் கார் விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 96 வயது மூதாட்டிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைத் தண்டனை விதிப்பு
பிரித்தானியாவில் மெர்சிசைட்டின் ஐன்ஸ்டேல் பகுதியை சேர்ந்த 96 வயது மூதாட்டி ஜூன் மில்ஸ்(June Mills), காரில் விபத்து ஏற்படுத்தி பாதசாரியின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததை ஒப்புக் கொண்டதை அடுத்து திங்கட்கிழமை லிவர்பூ கிரவுன் நீதிமன்றம் மூதாட்டி 18 மாத சிறைத் தண்டனையை விதித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பிரெண்டா ஜாய்ஸ்(Brenda Joyce) என்ற 76 வயது முதியவரின் உயிரிழப்புக்கு பொறுப்பேற்று ஜூன் மில்ஸ் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளார்.
மில்ஸ், தன்னுடைய Vauxhall corsa காரை நடைபாதை மீது ஏற்றி ஜாய்ஸ் மற்றும் மற்றொரு பாதசாரியின் மீது விபத்து ஏற்படுத்தியதை அடுத்து இவை அரங்கேறியுள்ளது.
விபத்தில் சிக்கிய மற்றொரு நபரான 80 வயது பெண்மணி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
நீதிமன்றத்தில் மில்ஸ் தரப்பு வாதம்
நீதிமன்றத்தில் ஜூன் மில்ஸ் தரப்பு வழக்கறிஞர் டாம் ஜெண்ட், குற்றம்சாட்டப்பட்டுள்ள தன்னுடைய தரப்பு வாதி தவறுதலாக வேக முடுக்கியை அழுத்தமாக மிதித்து விட்டதாகவும், அதன் காரணமாகவே கார் நடைபாதை மீது ஏறியது என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த இக்கட்டான நேரத்தில் மில்ஸ் மிகவும் பதட்டமடைந்து சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட தவறிவிட்டதாக வாதாடினார்.
மில்ஸின் தண்டனை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மில்ஸ் தான் தற்போது பிரித்தானியாவில் மிகவும் வயதான வாகன விபத்தில் குற்றம் சுமத்தப்பட்ட நபராக கருதப்படுகிறார்.
அமேசான், ஃப்ளிப்கார்ட் விழா கால விற்பனை: ரூ. 15,000க்குள் விற்பனை செய்யப்படும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |