சூடானில் ஏற்பட்ட மோதல்களால் 97 பேர் உயிரிழப்பு (உலக செய்திகளின் தொகுப்பு)
துருக்கி நாட்டின் அப்சின் நகரில் இருந்து 23 கிலோமீட்டர் தென்மேற்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவில் அரிய வகை உண்ணிக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள அலபாமா மாநிலத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 04 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளனர்.
சூடானில் அரச படைக்கும் துணை இராணுவக் குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களால் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு சுமார் 1,100 பேர் காயமடைந்துள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரேனின் பக்முத் நகரில் தனது தனியார் ராணுவக் குழுவான வாக்னர் மேலும் 2 இடங்களைக் கைப்பற்றியிருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்துகொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.