அடுத்த 5 ஆண்டுகளில் 99 சதவீத தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் போகலாம்.., AI குறித்து எச்சரிக்கை
அடுத்த 5 ஆண்டுகளில் 99 சதவீத தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் போகலாம் என்று செயற்கை நுண்ணறிவு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
AI குறித்து எச்சரிக்கை
தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருவதில் தீமைகள் இருந்தாலும் பல நன்மைகளும் உள்ளன. அந்தவகையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வந்ததையடுத்து அனைத்து துறைகளிலும் வேலைகள் எளிதாகி விட்டன.
வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் சுமார் 5 ஆண்டுகளில் 99 சதவீத தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் போகும் என்று செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து அமெரிக்காவின் லூயிஸ்வில் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பேராசிரியர் ரோமன் யம்போல்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்க AI அமைப்புகளை செயல்படுத்தி வருகின்றன, இதன் விளைவாக பணியாளர்களை பணிநீக்கம் செய்கின்றன.
"இப்போது 10 சதவீத வேலையின்மை பற்றிப் பேசவில்லை. இது 99 சதவீதம், பயமாக இருக்கிறது. AI கருவிகள் மற்றும் மனித ரோபோக்களால் சில ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் சந்தை வீழ்ச்சியடையும்" என்றார் பேராசிரியர்.
அனைத்து வேலைகளும் தானியங்கிமயமாக்கப்படும். இதற்கு ஆப்ஷன் B இல்லை என்றும் அவர் கூறினார்.
AI ஸ்டார்ட்அப் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டாரியோ அமோடி, "அனைத்து தொடக்க நிலை அலுவலக வேலைகளும் வெறும் ஐந்து ஆண்டுகளுக்குள் இல்லாமல் போகலாம்" என்று எச்சரித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |