பிரித்தானியாவில் 99 வயது மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்! ரகசிய கேமராவில் சிக்கிய கொடூரன்.. பின்னர் நடந்தது என்ன?
இங்கிலாந்தில் பராமரிப்பாளர் ஒருவர் 99 வயது மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் 99 வயது மூதாட்டி ஒருவர் Dementia என்னும் ஞாபக மறதி நோயால் பாதிக்கபட்டு வந்துள்ளார். அவர் Black Bull என்னும் பராமரிப்பு இல்லத்தில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே அவரது உறவினர்கள் அவரை பார்க்க வந்தபோது அவரது நடத்தையில் சற்று வித்தியாசம் தென்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து கேமிரா ஒன்றை அவரது அறையில் ரகசியமாக பொருத்தியுள்ளனர்.
அதில் பராமரிப்பாளரான 48 வயது Phillip Carey என்பவர் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தது பதிவாகி இருந்தது. இதையடுத்து பதறிப்போன மூதாட்டியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து புகாரின் அடிப்படையில் பொலிஸ் அவரை கைது செய்ததது. மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதற்காக அவருக்கு 10 ஆண்டுகள் கடுங் காவல் தண்டனை வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மூதாட்டியின் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், சில நாட்களாகவே அவருடைய நடத்தையில் சிறிது மாறுதல் இருந்தது. இதையடுத்து யாரோ அவரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்பது தெரிய வந்தது.
அதன்பிறகு தான் கேமரா பொருத்தி கண்காணித்தோம். ஆனால் பராமரிப்பாளர் இதை செய்வார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் குடும்பத்தினருக்கு இது மிகவும் வேதனை அளிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.