ஆசிரியரை சுட்டுக்கொன்ற 6 வயது சிறுவன்: அமெரிக்காவில் நடந்த சம்பவம்
அமெரிக்காவின் வேர்ஜினியா மாகாணத்தில் ஆரம்பப்பள்ளியில் கல்விக்கற்கும் 6 வயது சிறுவன் ஒருவன்,தனது ஆசிரியரைச்சுட்ட சம்பவம் அப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸாரின் தகவல்
பொலிஸார் கூறுகையில் சிறுவன் தனது புத்தகப்பையில் துப்பாக்கியை,ஜனவரி 6ம் திகதி ரிச்னெக் ஆரம்பப்பாடசாலைக்கு கொண்டு வந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.மேலும் அவர்கள் கூறுகையில் “அபிகேல் ஸ்வேர்னர்“ எனப்படும் 25 வயதான ஆசிரியையே சுடப்பட்டுள்ளார்.கையிலும்,மார்பிலும் சுடப்பட்டுள்ளார்.
புதன்கிழமை, நியூபோர்ட் நியூஸ் காமன்வெல்த் வழக்கறிஞர் ஹோவர்ட் க்வின் என்பிசி நியூஸிடம் தனது அலுவலகம் சிறுவனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கோராது என்று கூறினார்.சட்ட அமைப்பை புரிந்துக்கொள்ளும் அளவிற்கு சிறுவனுக்கு பக்குவம் இல்லை என்பதனால் அவனை விசாரணைக்கு அழைத்துச்செல்வது சிக்கலானது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
எங்கள் நோக்கம் முடிந்தளவு விரைவாக நடவடிக்கை எடுப்பது மட்டுமல்ல என திரு.க்வின் கூறியுள்ளார்.நாங்கள் உண்மைகளை ஆராய்ந்தவுடன் குற்றத்தை செய்த நபரையோ,நபர்களையோ தகுந்த ஆதாரத்துடன் சட்டத்தின் முன் நிறுத்துவோம் எனவும் கூறியுள்ளார்.
சிறுவனுக்கு முன் மூன்று எச்சரிக்கைகள் சுட்டுக் கொல்லப்பட்ட ஆசிரியர் வழக்கறிஞர் திருமதி ஸ்வெர்னர், முதல் வகுப்பு மாணவனுடன் "தகராறு" என்று பொலிஸார் விவரித்ததைத் தொடர்ந்து, அவரது கை மற்றும் மேல் மார்பில் சுடப்பட்டதைத் தொடர்ந்து பள்ளி மாவட்டத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
மேலும் பொலிஸார் கூறுகையில், ஆசிரியரைச்சுட்டுக்கொல்ல சிறுவன் பயன்படுத்திய துப்பாக்கியானது சிறுவனின் தாயாருக்கு உரிமையான, சட்ட ரீதியாக வாங்கப்பட்ட துப்பாக்கி எனவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.