இன்ஸ்டாகிராம் காதலியை தேடிச்சென்ற காதலனுக்கு நேர்ந்த கொடூரம்!
திருப்பூரை சேர்ந்த சஞ்ஜீவ்குமார் (வயது 18) இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையை சேர்ந்த 16 வயது பெண்ணோடு பழகி அவரைக்காண சென்று சுகவீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
மேலும் இவர்களின் நட்பு நெருக்கமாக மாறி, இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி போன்கால் மூலம் பேசிக்கொண்டுள்ளனர்.
பிறந்தநாளன்று காதலியை காணச்சென்ற சஞ்ஜீவ்குமார்!
மேலும் தனது காதலியைக்காண சென்னை சென்ற சஞ்ஜீவ் அவருக்கு பரிசுப்பொருட்கள் மற்றும் தேவையான பொருட்கள் என அனைத்தையும் வாங்கிக்கொடுத்துள்ளார்.பின் திடீரென உடல்நிலைக்குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின் பொலிஸார் நடாத்திய விசாரணையின் போது தனது காதலி தந்த குளிர்பானத்தை பருகியதிலிருந்து தான் தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் அதில் தனது காதலி விஷம் கலந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் கூறியுள்ளார்.ஆனால் உறுதியான ஆதாரம் எதுவும் இல்லாததால் இதற்கான நடவடிக்கையை பொலிஸாரால் எடுக்கமுடியவில்லை .
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சஞ்ஜீவ்குமார்!
மேலும் தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில் சஞ்சீவ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. சஞ்சீவ்குமாரின் பெற்றோர் தனது மகனின் மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடித்து தருமாறு கேட்டுள்ளனர்.