பயணிகளுடன் கால்வாய்க்குள் விழுந்து மூழ்கிய பேருந்து! 35 பேர் பலி: இந்தியாவில் நடந்த கோர சம்பவம்
இந்தியாவில் 54 பயணிகளுடன் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் விழுந்ததால், 35 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மத்தியபிரசேதத்தில் 54 பயணிகளுடன் பயணித்த பேருந்து சித்தி பகுதியிலிருந்து சத்னாவுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
அப்போது பேருந்து திடீரென்று கட்டுப்பாட்டை மீறி, போகும் வழியில் இருந்த கால்வாயில் திடீரென்று விழுந்தது.
#UPDATE Madhya Pradesh: A total of 35 bodies recovered till now from the site in Sidhi where a bus, carrying around 54 passengers, fell into a canal today. 7 people were rescued. A search operation is underway. pic.twitter.com/Q47fSHhgUw
— ANI (@ANI) February 16, 2021
இதனால் பயணிகளுட்ன பேருந்து கால்வாயில் மூழ்கியது, இது குறித்த தகவல் உடனடியாக மீட்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த மீட்பு படையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் 32 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், மீதமுள்ள 20-க்கும் மேற்பட்டோரை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.