லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உணவு கடைக்குள் புகுந்த கார்: 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
Vehicle plowed into food shop in Los Angeles: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த கோரமான சாலை விபத்தில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்ஸில் சாலை விபத்து
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நார்த் ஹாலிவுட் பகுதியின் E. Lankershim Boulevard பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தம் அருகே இயங்கி வந்த உணவுக் கடைக்குள் வெள்ளை நிற SUV ரக கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து உள்ளே பாய்ந்தது.
இந்த விபத்து சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர். மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.
மேலும் உணவு கடையை சுற்றி இருந்த பொதுமக்களிடம் விபத்து தொடர்பான விசாரணையை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
[74KG6K ]
கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகியதற்கான காரணத்தை காவல்துறையினர் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் மற்றும் ஓட்டுநர் மீதான சட்ட நடவடிக்கை குறித்து எந்தவொரு கூடுதல் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.