நடிகர் ரஜினியை தொடர்ந்து அரசியலிருந்து விலகுவதாக முக்கிய அரசியல் பிரபலம் அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்த்தை தொடர்ந்த காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் அரசியலில் இருந்த விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என டிசம்பர் 3ம் தேதி, ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த, அர்ஜுனமூர்த்தி மற்றும் தமிழருவி மணியன் ஆகியோரை மேற்பார்வையாளராகவும் நியமித்தார்.
இந்நிலையில், நேற்று டிசம்பர் 29ம் தேதி தனது உடல்நலத்தை காரணம் காட்சி அரசியலுக்கு வரவில்லை என ரஜினி அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், ரஜினி தொடங்கவிருந்த கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்ட தமிழருவி மணியன் அரசியலில் இருந்து விடை பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழருவி மணியனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்தக் கைம்மாறும் கருதாமல் சமூக நலனுக்கான என்னுடன் கைகோர்த்த நடந்த காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடை பெற்றுக்கொள்கிறேன்.
இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
