கோயில் உண்டியலில் ரூ.100 கோடிக்கான காசோலை! வங்கியில் கிடைத்த அதிர்ச்சி
கோயில் உண்டியலில் காணிக்கையாக பக்தர் ஒருவர் ரூ.100 கோடிக்கான காசோலையை செலுத்தியதையடுத்து, அவரது வங்கியில் இருந்த பணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.100 கோடிக்கான காசோலை
இந்திய மாநிலம், ஆந்திர பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பண்ணா வராக லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் உண்டியலில் 15 நாள்களுக்கு ஒரு முறை பணம் எண்ணப்பப்படுவது வழக்கமான ஒன்று.
இந்நிலையில், நேற்று இந்த கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது. அப்போது பக்தர் ஒருவர் 100 கோடி ரூபாய்க்கான காசோலையை செலுத்தியிருப்பது தெரியவந்தது. மேலும், வராக லக்ஷ்மி நரசிம்ம தேவஸ்தானம் என்ற பெயரில் காசோலையில் எழுதப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்லாமல், முதலில் 10 ரூபாய் என எழுதப்பட்டு, பின்பு அதை அடித்து ரூ.100 கோடி என காசோலையில் எழுதப்பட்டிருந்தது.
இதனால் கோயில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது மட்டுமல்லாமல் ஆர்வமும் அதிகமானது.
வங்கியில் இருந்த பணம்
பின்னர், இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, காசோலையில் இருந்த விவரத்தின் அடிப்படையில் விசாரித்த போது பெத்த பள்ளி ராதாகிருஷ்ணாவின் சேமிப்புக் கணக்கு காசோலை என்று தெரிய வந்தது.
மேலும், இவரது வங்கிக்கணக்கில் வெறும் ரூ.17 மட்டுமே இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இது தொடர்பாக முழு விவரங்களை திரட்ட தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |