பாகிஸ்தானில் இருந்து வந்த கிறிஸ்தவருக்கு.., சிஏஏ மூலம் கிடைத்தது இந்திய குடியுரிமை
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த கிறிஸ்தவருக்கு சிஏஏ மூலம் இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது.
இந்தியாவில் ஆட்சி செய்யும் பாஜக அரசு பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது.
இந்த குடியுரிமை சட்டத்தின் மூலம் மேற்கு வங்கம், பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் பகுதியில் உள்ள முஸ்லீம் அல்லாத சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டது.
குறிப்பாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் பார்சிகள், ஜைனர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் கொண்டுவரப்பட்டது.
அந்தவகையில் இந்தியாவில் முதற்கட்டமாக கடந்த ஆண்டு மே மாதம், குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்திய குடியுரிமை
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த கிறிஸ்தவர் ஜோசப் பிரான்சிஸ் பெரேரா. இவருக்கு நேற்று கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் குடியுரிமை வழங்கினார்.
இவர் கோவா மாநிலத்தில் குடியுரிமை பெறும் முதல் நபர் ஆவார். இவர், கோவா விடுதலை அடைவதற்கு முன்பாக கடந்த 1961- ம் ஆண்டு போர்த்துகீஸ் நாட்டிலிருந்து பாகிஸ்தான் நாட்டிற்கு படிப்பதற்காக சென்றுள்ளார்.
பின்னர் அவருக்கு பாகிஸ்தானில் வேலை கிடைத்து அங்கேயே குடியுரிமையை பெற்றுள்ளார். இதையடுத்து, கடந்த 2013 -ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த நிலையில் தற்போது குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த சட்டமானது இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |