10 லட்சம் உயிர்களை கொல்லும் பிரபல நாடு! ஏதற்காக? வெளியான காரணம்
பறவைக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதன் காரணமாக ஜப்பானின் சிபா மாகாணத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான கோழிகள் கொல்லப்படும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானில் பறவைக் காய்ச்சலால் பதிக்கப்பட்ட 13வது பிராந்தியம் சிபா என்பது குறிப்பிடத்தக்கது.
சிபா பிராந்தியத்தில் H5 பறவைக் காய்ச்சல் அதிகமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பண்ணையில் சுமார் 1.16 மில்லியன் கோழிகள் கொல்லப்படும் என ஊடகங்கள் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
சிபா பிராந்தியத்தில் 10 கிலோமீட்டர் பகுதிக்கு தனிமைப்படுத்தலை அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர், அங்கு கோழிகள் மற்றும் முட்டைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், Kagawa, Fukuoka, Hyogo, Miyazaki, Hiroshima, Nara, Oita, Wakayama, Okayama, Shiga, Tokushima and Kochi ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நோய் பரவாமல் தடுக்க 3.4 மில்லியனுக்கும் அதிகமான உள்நாட்டு பறவைகள் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளன.
பிரித்தானியா, நெதர்லாந்து, வடக்கு ஜேர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் பறவைக் காய்ச்சல் பரவியது சமீபத்தில் கண்டறியப்பட்டது.