8,40,000 கோழிகளை கொல்லும் பணியை தொடங்கியது பிரபல நாடு! ஏதற்காக?
ஜப்பானில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ள நிலையில் இபராகி மாகாணத்தில் சுமார் 8,40,000 கோழிகள் கொல்லும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் இது இந்த குளிர்காலத்தில் பறவைக் காய்ச்சல் தொற்றுகளை பதிவு செய்யும் 17 வது மாகாணமாக இபராகி மாறியது.
திங்களன்று, இபராகியில் உள்ள ஒரு கோழி பண்ணையில் 12-க்கும் அதிகமாக இறந்த கோழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனையடுத்து,செவ்வாய்க்கிழமை காலை முதல் ஷிரோசாடோ நகரில் அமைந்துள்ள கோழி பண்ணையில் சுமார் 840,000 கோழிகளை கொல்லும் பணி தொடங்கியது.
மேலும், கோழி பண்ணையிலிருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிக்குள் கோழிகள் மற்றும் முட்டைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், பறவைக் காய்ச்சல் பரவியதை அடுத்து டோயாமா மாகாணத்தில் சுமார் 1,40,000 கோழிகள் கொல்லப்பட்டன.
ஜப்பானில் 2020 நவம்பரில் பரவ தொடங்கிய பறவைக் காய்ச்சலால் நாட்டில் சுமார் 6 மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் கொல்லப்பட்டுள்ளதாம்.
இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு பருவத்தில் அதிக பறவைகள் கொல்லப்பட்டுள்ளது இம்முறை தான் என ஜப்பானின் வேளாண்மை, வனவியல் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், பறவைக் காய்ச்சல் பாதிப்பால் 40-க்கும் மேற்பட்ட பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளன என ஜப்பான் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.