லட்டு விற்பனையில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தம்பதியினர்
லட்டு நிறுவனம் தொடங்கி கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தம்பதியினரின் வெற்றிக்கதையை பற்றி பார்க்கலாம்.
யார் இவர்கள்?
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த தம்பதியினர் சாந்தீப் ஜோகிபர்த்தி மற்றும் கவிதா கோபு. இவர்கள் இருவரும் பொறியியல் படிப்பு படித்து அமெரிக்காவில் வேலை பார்த்து வந்தனர்.
இவர்களுக்கு சொந்த ஊரான ஹைதராபாத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் 2019 -ம் ஆண்டு சொந்த ஊருக்கே திரும்பி வந்தனர். சுமார் 6 மாதங்களுக்கு சாந்தீப் நாடு முழுவதும் பயணம் செய்து தொழில் பற்றி ஆய்வு செய்தார்.
அப்போது அவருக்கு ஃபுட், ஹெல்த் செக்மெண்ட் ஆகிய இரண்டும் தான் பிரதானமாக தெரிந்தது. இதனால் இனிப்பு சாப்பிடுபவர்களை திருப்திப்படுத்தும் அதே வேளையில் ஆரோக்கியத்தை தருவதாகவும் இருக்க வேண்டும் என்று சாந்தீப் முடிவெடுத்தார்.
Laddu Box
இதனைத்தொடர்ந்து வீடுகளில் தயாரிக்கப்படும் பாரம்பரிய லட்டுகள் குறித்து தம்பதியினர் ஆய்வு செய்ய ஆரம்பித்தனர். அப்போது சர்க்கரைக்கு பதிலாக கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் வெல்லத்தைத் தேர்வு செய்தனர்.
பின்பு, கையில் இருந்த ரூ.1 லட்சத்தை முதலீடு செய்து கையால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை பல்வேறு கண்காட்சிகள், ஐடி கம்பெனிகளில் மார்க்கெட்டிங் செய்தனர். இதனால், இவர்களது ஃபாலோ அப் கால்களும், பல்க் ஆர்டர்களும் குவிந்தன.
இதனைத்தொடர்ந்து, 2020 -ம் ஆண்டு மே மாதத்தில் லட்டு பாக்ஸ் (Laddu Box) என்ற நிறுவனத்தை தம்பதியினர் தொடங்கினர். அப்போது கொரோனா தொற்று வந்துவிட்டதால் வருமானம் அவ்வளவாக வரவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் தொழிலை தொடங்கினர்.
முதலில் நான்கு ஐட்டங்களுடன் தயாரித்து விற்ற லட்டு பாக்ஸ், மல்டிகிரெய்ன் லட்டு, சிறுதானிய லட்டுகள், பாசிப்பருப்பு லட்டு, ஆளி விதை லட்டு, உலர் பழங்கள் லட்டு, நிலக்கடலை லட்டு உள்பட 15 வகையான லட்டுகளை தயாரித்து விற்பனை செய்கிறது.
இந்த லட்டு பாக்ஸ் நிறுவனத்தின் 2023 -ம் ஆண்டின் வருடாந்திர டர்ன்ஓவர் ரூ.2 கோடி ஆகும். மேலும், அடுத்த இரண்டு ஆண்டிற்கு பெங்களூரு, ஹைதராபாத், புணே, மும்பை, தில்லி என்சிஆர் பகுதிகளில் 100 கடைகளை திறக்க லட்டு பாக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக லட்டுகளை ஒன்லைன், B2B சேனல்கள் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஸ்டோர் ஆகிய மூன்று வழிகளில் சப்ளை செய்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |