லொட்டரியில் பெருந்தொகை வென்ற தம்பதியர்... தெரிவிக்கும் எச்சரிக்கை செய்தி

United States of America Lottery
By Balamanuvelan Aug 02, 2022 12:30 PM GMT
Report

லொட்டரியில் பெருந்தொகை வென்ற சிலர் உடனடியாக அந்த பரிசுத்தொகையை வாங்காமல் காலம் தாழ்த்துவது, முகமூடி அணிந்து பரிசை வாங்கிச் செல்வது, தங்கள் பெயரை வெளியிடவேண்டாம் என கேட்டுக்கொள்வது என பல விடயங்கள் குறித்து நாம் செய்திகள் வாயிலாக அறிந்துகொள்கிறோம்.

ஆனால், அவர்கள் அப்படிச் செய்வதற்கு நியாமான காரணங்கள் உள்ளன என்பதை உறுதி செய்யும் சில செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில், விமானப்படையில் பணி செய்து ஓய்வு பெற்ற Dave Harrig என்பவருக்கு லொட்டரியில் பெருந்தொகை ஒன்று பரிசாக கிடைத்தது. அடுத்த நாள் முதல், அவர் வீட்டுக்கு ஏராளமான கடிதங்கள் வரத் துவங்கின. என் பிள்ளைக்கு உடல் நலமில்லை, வேலை போய்விட்டது, என் வீடு தீயில் எரிந்து நாசமாகிவிட்டது என பல்வேறு காரணங்களைக் கூறி மக்கள் அவரிடம் பணம் கேட்டு எழுதிய கடிதங்கள் அவை.

கொஞ்ச நாட்களில் Dave மற்றும் அவரது மனைவி Erica Harrigஐக் குறித்த வதந்திகள் பரவத் துவங்கின. Daveஇன் மனைவி அவரை விட்டுவிட்டு ஒரு மருத்துவருடன் ஓடிப்போய்விட்டதாகவும், Daveக்கும் சட்டத்தரணியான ஒரு இளம்பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கதைகள் உலாவரத் துவங்க, பள்ளியில் அவரது பிள்ளைகள் சீண்டப்பட்டிருக்கிறார்கள்.

Andrew Whittaker Jr என்பவருக்கு இதேபோல மிகப்பெரிய தொகை ஒன்று லொட்டரியில் கிடைத்துள்ளது. ஒரு கட்டத்தில் மதுவுக்கும் சூதாட்டத்துக்கும் அடிமையாகிப்போயுள்ளார் அவர். குடும்பத்தில் தொடர்ச்சியாக பல இழப்புகள்... கடைசியாக தனது அன்பு பேத்தியின் மரணத்தையும் பார்த்தபிறகே மரணமடைந்திருக்கிறார் Andrew.

Manuel Franco என்பவரும் லொட்டரியில் பெருந்தொகை ஒன்றை வென்றிருக்கிறார். தனது வெற்றியை ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் வெளியிட்டுள்ளார் அவர். அவ்வளவுதான், அதற்குப் பிறகு தெரிந்தவர்கள் தெரியாதவர்களிலிருந்து, ஊடகங்கள் வரை அவருக்கு கொடுத்த தொல்லை தாங்காமல் ஒரு கட்டத்தில் தலைமறைவாகிவிட்டாராம் Manuel.

ஆனால், அவருக்கு பிரச்சினை முடிந்தாலும், அவரால் புதிதாக பிரச்சினை உருவாகியுள்ளது. Manuel எழுதியது போல் பலருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் தான் அவர்களுக்கு உதவி செய்வதற்காக அவர்களைத் தேர்வு செய்துள்ளதாக Manuel எழுதுவது போல குறிப்பிடப்பட்டிருக்க, அதை நம்பிய பலரிடம் பண மோசடி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில், Barry, Jenny Chuwen என்னும் பிரித்தானிய தம்பதியருக்கு லொட்டரியில் 4.6 மில்லியன் பவுண்டுகள் பரிசாக கிடைத்ததைத் தொடர்ந்து மன அழுத்ததுக்கு ஆளாகி, கடைசியில் கணவனும் மனைவியும் பிரிந்ததைக் குறித்த ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

லொட்டரியில் பெருந்தொகை வென்ற தம்பதியர்... தெரிவிக்கும் எச்சரிக்கை செய்தி | A Couple Who Won A Lot Of Money In The Lottery

Image - globalnews

ஆனால், நாம் செய்தியின் ஆரம்பத்தில் சந்தித்த Dave மற்றும் Erica Harrig தம்பதியர், தாங்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்த பிறகும், அவற்றிலிருந்து தாங்கள் பாடம் கற்றுக்கொண்டதாக தெரிவிக்கிறார்கள்.

ஆக, திடீரென ஒரு பெரும் தொகை லொட்டரியில் பரிசாக கிடைத்தாலும், கணவனும் மனைவியும் இணைந்து வாழ்வில் வரும் பிரச்சினைகளை கவனமாக எதிர்கொள்ளவேண்டும். பணம் வந்தவுடனேயே நமது பெயர் கெடுவதற்கும், போதை போன்ற விடயங்களுக்கு அடிமைப்படுவதற்கும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனாலும் நாம் கவனமாக இருந்தால் அவைகளை மேற்கொண்டு விடலாம் என்கிறார்கள் Dave, Erica தம்பதியர்.

ஆம், பணம் வந்தாலும், அவர்கள் இன்னமும் தங்கள் சமுதாயம், தங்கள் தேவாலயம், குடும்பத்தினர், நண்பர்கள் என அதே வட்டத்தில் வாழ்வதுடன், கடின உழைப்பையும் தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.  

நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US