"எனக்கு ஆபாச படம் அனுப்பியவனை., தூக்கிட்டு வந்து நானே தீர்ப்பெழுத்துவேன்" பெண் வேட்பாளர் சபதம்!
தனக்கு ஆபாச படங்களை அனுப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், அவருக்கு தானே பொது இடத்தில் வைத்து கொடூரமான தண்டனை கொடுப்பேன் என கி.வீரலட்சுமி கூறியுள்ளார்.
தமிழர் முன்னேற்றபடை என்ற அமைப்பின் நிறுவனர் கி.வீரலட்சுமி. இராமநாதபுரத்தை சேர்ந்த இவர் சென்னை பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் 'My India Party' சார்பில் போட்டியிடுகிறார்.
வீரலட்சுமி பம்மல் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு புதிய எண்ணில் இருந்து ஆபாச வீடியோக்கள் வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் இதுகுறித்து பொலிஸில் புகார் அளித்ததையடுத்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீரலட்சுமி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனக்கு “ஆபாச வீடியோ அனுப்பிய நபரை 3 நாட்களில் போலீசார் கைது செய்ய வேண்டும் .
இல்லையெனில் சம்பந்தப்பட்டவனை தூக்கிட்டு வந்து நிர்வாணமாக பல்லாவரம் சந்தையில் கட்டி வைத்து, பிறப்புறுப்பை அறுத்து, அதை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன்” என சபதம் எடுத்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனக்கு ஆபாச படம் அனுப்பியவருக்கு பல்லாவரம் சந்தையில் வைத்து நானே திப்பெழுத்துவேன் என்று கூறியுள்ளார். அவரது பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.