ரஷ்யாவில் தொழிற்சாலை ஒன்றிற்கு தீவைப்பு... 1,000 சதுர மீற்றர் பரப்பை விழுங்கியும் அடங்காத தீ
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள டயர் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீப்பற்றிய நிலையில், யாரோ வேண்டுமென்றே தீவைத்துள்ளதை ரஷ்ய அதிகாரிகள் உறுதி செய்துள்ளார்கள்.
நேற்று காலை, மாஸ்கோவில் நெடுஞ்சாலை ஒன்றில் அமைந்துள்ள டயர் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீப்பற்றியது. தீயில் அங்கிருந்த எரிவாயு சிலிண்டர்களும் வெடித்துச் சிதறியதாகவும், மேலும் சிலிண்டர்கள் வெடிக்கும் அபாயம் உள்ளதாகவும் தகவல் வெளியானது.
ஏற்கனவே 1,000 சதுர மீற்றர் பரப்பு தீக்கிரையாகிவிட்ட நிலையில், மேலும் தீ பரவிவருவதாகவும் தீயை அணைக்க ஹெலிகொப்டர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால், இந்த தீயால் யாருக்காவது சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
⚡️The fire in Moscow covered more than a thousand square meters, - mass media .There are gas cylinders on the territory of the warehouse - there have already been several explosions that may happen again. pic.twitter.com/wAy4KBFjTZ
— Flash (@Flash43191300) June 29, 2022
‼️South of Moscow, the area of the fire increased to 2.000 square meters. The fire spread to the second hangar.
— Mole ?? (@UkrMole) June 29, 2022
The Emergencies Ministry said the fire was an act of sabotage.#UkraineRussianWar #Russia #RussiaIsBurning #RussiaOnFire pic.twitter.com/esbmFMJ0sc