25 வயதான கால்பந்து பயிற்சியாளர் வீட்டுக்கு சென்ற 15 வயது மாணவிக்கு நேர்ந்த கதி! கண்ணீருடன் அளித்துள்ள புகார்... புகைப்படம்
அமெரிக்காவில் தன்னிடம் கால்பந்து பயிலும் மாணவியை வீட்டுக்கு அழைத்து அவரிடம் மோசமான முறையில் நடந்து கொண்ட குற்றத்திற்காக பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாதன் ரோஜர்ஸ் (25) என்பவர் சவுத் சியோக்ஸ் நகரில் உள்ள பள்ளியில் கால்பந்து பயிற்சியாளராக இருந்தார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பரில் நாதனால் தான் பாதிக்கப்பட்டதாக 15 வயது மாணவி கண்ணீர் புகார் கொடுத்துள்ளார்.
அதில் வேப் பென் என்னும் இ - சிகரெட்டை நாதனிடம் இருந்து பெற அவர் வீட்டுக்கு சென்றேன்.
அப்போது என் மீது கை வைத்து என் உடைகளை களைந்து என் மீது பாலியல் தாக்குதல் நடத்தினார்.
இதன் பின்னர் அவரை குத்திவிட்டு தப்பியோடி விட்டேன் என தெரிவித்துள்ளார். ஆனால் நாதனோ தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள நிலையில் மாணவியின் ஒப்புதலோடு அவருடன் உறவு கொண்டதாக கூறியுள்ளார்.
எப்படியிருந்தாலும் பொலிசார் நாதனை கைது செய்து அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையில் 21 வயதுக்கு குறைவானர்களுக்கு பேப் பேன் என்னும் இ - சிகரெட்டை வழங்குவது குற்றம் எனவும் தெரியவந்துள்ளது, இது தொடர்பான வழக்கும் நாதன் மீது பாயலாம் என தெரிகிறது.
இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார் என தெரியவந்துள்ளது.
