இரவு நேரத்தில் தைரியமானவர்கள் கூட பயணிக்க அஞ்சும் ஒரு காடு: அச்சத்தையூட்டும் புகைப்படங்கள்
ஜேர்மனியில் உள்ள காடு ஒன்றில் காணப்படும் காட்சிகள் புகைப்படக் கலைஞர்களின் கமெராக்களின் பசியை ஆற்றும் விதத்தில் அமைந்திருந்தாலும், இரவு நேரங்களில் அங்கு செல்ல அஞ்சுகிறார்களாம் அவர்கள்.
அதற்கு காரணம் அங்குள்ள மரங்களில் தொங்கவிடப்பட்டுள்ள பொம்மைகள்.
அச்சத்தையூட்டும் வகையில் அந்த காட்டிலுள்ள மரங்களில் விதவிதமான பொம்மைகள் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன.
பயங்கர முக பாவத்துடன் சில பொம்மைகள், கழுத்தில் கயிறு கட்டி தொங்கவிடப்பட்டுள்ள சில பொம்மைகள், அழும் பொம்மைகள், கோமாளி வேடத்தில் சில பொம்மைகள் என ஒவ்வொரு பொம்மையும் ஒவ்வொரு வித உணர்வையூட்டுபவையாக உள்ளதை வெளியாகியுள்ள புகைப்படங்களில் காணலாம்.
தப்பித்தவறிக்கூட, அதுவும் தனியாக, அந்தப் பக்கம் போகமாட்டேன் என்கிறார் புகைப்படக்கலைஞர் ஒருவர்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் அந்தக் காட்டுக்குச் சென்றுள்ளார் ஜேர்மன் புகைப்படக் கலைஞர் ஒருவர். தற்போது, மீண்டும் அவர் அங்கு செல்ல, அந்தக் காட்டில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே பயங்கரத்துடன் இன்னமும் அப்படியே இருக்கிறதாம் அந்தக் காடு!