திருட்டு வழக்கை விசாரிக்க சென்ற பொலிஸை அடித்தே கொன்ற கும்பல்! குற்றவாளிகளுக்கு வலைவீச்சு

Crime India Bihar Gang of Mobs Police officer's death
By Balakumar Apr 10, 2021 03:21 PM GMT
Report

இந்திய மாநிலம் பீகாரில் பைக் திருட்டு வழக்கை விசாரிக்க சென்ற பொலிஸ் அதிகாரியை ஒரு கும்பல் அடித்தே கொலை செயதுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் உள்ள கிஷன்கஞ்ச் மாவட்டத்தை ஒட்டியுள்ள கோவல்போகர் காவல் நிலைய எல்லையில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், பைக் திருட்டு தொடர்பாக காவல் நிலைய அதிகாரி (SHO) அஸ்வினி குமார் மேற்கு வங்காளத்தின் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தின் பாண்டபாடா கிராமத்திற்கு சென்று விசாரித்துள்ளார்.

அப்போது ஒரு கும்பல் அஸ்வினி குமாரை கடுமையாக தாக்கிய நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மேற்கு வங்க காவல்துறை அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக இஸ்லாம்பூர் துணைப்பிரிவு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது.  

மேலும், இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் அனைவரும் விரைவில் வங்காள காவல்துறை உதவியுடன் கூட்டு சோதனைகளை மேற்கொண்டு கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்காலத்தில் தற்போது 4-ஆம் கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

GalleryGallery
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US