குடியுரிமை தொடர்பான பணிகளை விரைவாக்க ஜேர்மன் நகரம் ஒன்று எடுத்துள்ள முன்மாதிரியான நடவடிக்கை
நீண்ட காலமாக குடியுரிமை விண்ணப்பங்கள் பரிசீலனை முதலான விடயங்களில் அதிக தாமதம் என்பது போன்ற புகார்கள் அதிகம் கூறப்பட்டுவந்த ஜேர்மன் நகர புலம்பெயர்தல் அலுவலகம் ஒன்று, தற்போது மற்ற நகரங்களுக்கு முன்மாதிரியாக நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
Darmstadt’s நகர புலம்பெயர்தல் அலுவலகம் பல ஆண்டுகளாக குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலித்தல், காலாவதியான குடியிருப்பு அனுமதிகளை புதுப்பித்தல் முதலான விடயங்களில் மிகவும் தாமதம் காட்டுவதாக கெட்ட பெயரை சம்பாதித்துள்ளது.
ஆனால், அந்த அலுவலகத்தில் குறைவான பணியாளர்கள், மற்றும் அதிக வேலைப்பழு ஆகிய விடயங்கள்தான் பிரச்சினைக்குக் காரணம் என அந்நகர அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில், அப்பாயிண்ட்மெண்ட்களை ஒழுங்கு செய்வதற்கும், பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், புலம்பெயர்தல் அலுவலக அலுவலர்களை அணுகுவதற்கும் உதவியாக ஒரு சேவைக் குழு உருவாக்கப்பட உள்ளது.
அத்துடன், மின்னணு முறை விண்ணப்பம் செய்தலும் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
மேலும், இந்த பணிகளுக்காக 12 முழு நேரப் பணியாளர்கள் பணிக்கமர்த்தப்படவும் உள்ளார்கள்.
இதனால் தனிப்பட்ட அலுவலர்களின் வேலைப்பழு குறைவதுடன், பணிகளும் விரைவாக நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.