வீட்டுக்குள்ளிருந்து இரத்தம் சொட்டச்சொட்ட ஓடிவந்த சிறுமி... பின்னர் தெரியவந்த அதிர்ச்சிகர தகவல்
அமெரிக்காவின் அரிசோனாவில் ஒரு சிறுமி இரத்தம் சொட்டச்சொட்ட ஓடி வருவதைக் கண்ட அவளது பக்கத்துவீட்டுக்கார்கள், ஓடோடிச்சென்று அவளை அணைத்து தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.
Andrea Sanchez (12) என்ற அந்த சிறுமியிடம் அவர்கள் என்ன நடந்தது என விசாரித்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், அவள் வீட்டிலிருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க, அவளை இறுக அணைத்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள், அவசர உதவிக் குழுவினர் வரும் வரை.
பொலிசார் வந்து அந்த வீட்டுக்குள் சென்று பார்க்கும்போது, அங்கே Andreaவின் தந்தை Ruben Sanchez (51), தாய் Ana Guerra(49) மற்றும் அவளது அக்கா Amy Sanchez (18) ஆகியோர் இரத்த வெள்ளத்தில் சடலங்களாக கிடந்துள்ளார்கள்.
சமீபத்தில்தான் Andreaவின் தந்தையும் தாயும் விவாகரத்து செய்துகொண்ட நிலையில், ஒருவர் மற்றவர்களை சுட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
சுட்டவர் யார் என தெரியவில்லை. இதற்கிடையில், Andreaவுக்கு அதிர்ச்சியில் நடந்த எல்லாம் மறந்துவிட்டது.
அவளுக்கு அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவமே அவளுக்கு நினைவில்லை! இந்த துயர சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


