சிங்கத்தை துணிச்சலாக கையில் தூக்கி செல்லும் சிறுமி! பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்
சிறுமி ஒருவர் சிங்கத்தை கையில் தூக்கி செல்லும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வளைகுடா நாடுகளில் வசிக்கும் மக்கள் சிங்கம், சிறுத்தை, புலி போன்ற காட்டு விலங்குகளை செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்த்து வருகின்றனர். சவூதி அரேபியாவில் ஒரு சிறுத்தை குட்டி சுமார் 4.5 லட்சம் வரை விலை போவதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து அங்கு வசிக்கும் மக்கள் விலங்குகளை தங்கள் வீட்டின் பிள்ளை போல வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் குவை நாட்டில் சாலையில் சுற்றி திரியும் சிங்கத்தை சிறுமி ஒருவர் கையில் குழந்தை போல தூக்கி செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
குவைத்தின் சாபியா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிங்கக்குட்டி வளர்க்கப்பட்டு வந்துள்ளது. சிங்கம் வீட்டை விட்டு தப்பித்து சென்றுள்ள நிலையில் அந்த சிங்கத்தின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சிங்க குட்டியை வளர்த்து வந்த சிறுமி, அந்த சிங்கம் தெருவில் சுற்றித்திரிவதை கண்டு அதனை தூக்கி சென்றுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.