இன்று பூமியை மிக நெருக்கமாக கடக்கும் பிரமாண்ட சிறுகோள்! பூமிக்கு ஆபத்தா?
இந்த ஆண்டின் மிகப்பெரிய சிறுகோள் இன்று இரவு பூமியைக் கடக்க உள்ளது.
2021-ஆம் ஆண்டின் மிகப் பெரிய சிறுகோளான இது, இந்திய நேரப்படி மார்ச் 21-ஆம் தேதி இரவு 9:00 மணிக்கு பூமியை கடக்கிறது. 2001 FO32 என அழைக்கப்படும் இந்த விண்வெளி பாறை கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் அகலமானது.
இது உலகின் மிக உயரமான சிலையான 'ஒற்றுமை சிலையை விட இரு மடங்கு பெரியதாகும். சுமார் 440 மீட்டர் முதல் 680 மீட்டர் வரை அகலம் கொண்டது.
இது ஒரு மணி நேரத்திற்கு 123,876 கிலோமீட்டர் வேகத்தில், ஒரு சராசரி சிறுகோளை விட வேகமாக பறக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மேலும், 2001 FO32 சிறுகோள் பூமியிலிருந்து 2 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் பயணிப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
NASA வின் கருத்துப்படி, இந்த சிறுகோள் நமது கிரகத்திற்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது.
ஆயினும்கூட, இது நாசாவின் சிறுகோள் கண்காணிப்பு பட்டியலில் வைக்க போதுமானதாக உள்ளது மற்றும் ஒரு 'அபாயகரமான சிறுகோள்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
பெரிய சிறுகோள், பெரிய அச்சுறுத்தல் தான். பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்படும் அளவுக்கு அது நெருங்காத வரை நிம்மதி பெருமூச்சு விடலாம்.
2013 ஆம் ஆண்டில், 17 மீட்டர் அகலம் மட்டுமே இருந்த செல்லியாபின்ஸ்க் விண்கல் ரஷ்யாவின் மேற்பரப்பில் 30 கிலோமீட்டர் தொலைவில் நெருங்கும்போது வெடித்தது.
அதன் விளைவாக ரஷ்யாவின் செல்லியாபின்ஸ்கில் ஜன்னல் மற்றும் கதவுகள் சிதறின, அது 40 ஹிரோஷிமா குண்டுகளின் சக்தியுடன் வெடித்ததாக கூறப்படுகிறது.
நேரடி தாக்கம் இல்லை என்றாலும், இதன் விளைவாக 444,000 டன் TNT வெடித்ததற்கு சமமாக 500 சதுர கிலோமீட்டர் சுற்றளவில் கட்டிடங்களை உடைக்க போதுமானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.