வலுவடையும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.., இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
வங்கக்கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.
சென்னையிலிருந்து 1140 கி.மீ. தொலைவில் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் மேற்கு - வடக்கு மேற்கு திசையில் அது நகர்ந்து வருகிறது.

இந்நிலையில், இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
அதேபோல், நாளை திருவாரூர், நாகை மாவட்டங்களில் மிக கனமழையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, கடலூரில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், வரும் 10ஆம் திகதி மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூரில் மிக கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |