வேறு கண்டத்தில் தொலைந்து போன வாலட்: கடல் கடந்து 53 வருடங்கள் கழித்து கிடைத்த ஆச்சரிய சம்பவம்!
அண்டார்டிகாவில் 53 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த வானிலை ஆய்வாளரின் வாலட் இப்போது மீண்டும் கிடைத்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
1948-ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் சேர்ந்த Paul Grisham, விஞ்ஞானிகளை ஆதரிக்க ஆபரேஷன் டீப் ஃப்ரீஸின் ஒரு பகுதியாக அண்டார்டிகாவுக்கு அனுப்பப்பட்டார்.
அவர் 1968-ஆம் ஆண்டில் அதே பகுதியில் தனது பிரவுன் நிற வாலாட்ட ஒன்றை தொலைத்துவிட்டார். எங்கும் தேடிப்பார்த்த அவர் சில நாட்கள் கழித்து அதை மறந்துவிட்டார்.
இந்த நிலையில் 2014-ஆம் ஆண்டு Ross தீவில் உள்ள மெக்முர்டோ நிலையத்தில் ஒரு கட்டிடம் இடிக்கப்பட்டபோது, அந்த வாலட் ஒரு லாக்கரின் பின்னால் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வாலட்டில், கடற்படை அடையாள அட்டை, அவரது ஓட்டுநர் உரிமம், உயிரியல் அல்லது இரசாயன ஆயுதங்களால் தாக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான குறிப்பு அட்டை, பீர் வாங்குவதற்கான ஒரு ரேஷன் கார்டு என Grisham வைத்திருந்த அனைத்தும் அதில் இருந்துள்ளது.
இதனை எப்படியாவது Grisham-மிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக, அண்டார்டிகாவில் உள்ள ஒரு ஆய்வுக் குழுவின் தலைவர் தனது முன்னாள் ஊழியர்களில் ஒருவரைத் தொடர்பு கொண்டு, அவர் தற்போதைய நிலை மற்றும் எங்கு வாழ்கிறார் என்பதை அறிய தேடுதல் தொடங்கப்பட்டுள்ளது.
கடைசியாக கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் கழித்து, வடக்கு கலிபோர்னியாவின் சான் கார்லோஸில் Grisham வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவரது வீட்டுக்கே வளர் அனுப்பிவைக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை, 53 வருடங்களுக்கு முன்பு தொலைந்த போன தனது வாலட்டை தொட்டு திறந்து பார்த்து Grisham பெரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளார். அவருக்கு இப்பூத்து 91 வயதாகிறது.
வாலட்டும் அதிலிருந்த முக்கிய அடையாள அட்டைகளும், பணமும் அப்படியே எந்த சேதமும் இல்லாமல் கிடைத்துள்ளது.
தொலைந்து போன ஒரு பொருள் கடல் கடந்து, கண்டம் கடந்து 53 வருடங்கள் கழித்து கிடைப்பது என்பது உலக அதிசயம் என்று தான் சொல்லவேண்டும்.


