ஒரே மேடையில் 3 பெண்களை திருமணம் செய்து கொண்ட வாலிபர்! வியக்க வைக்கும் காரணம்.. வைரல் புகைப்படம்
ஆப்பிரிக்க இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்காவின் Congo பகுதியில் வசித்து வருபவர் Luwizo. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு Natalie என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் அவர்களின் முதல் சந்திப்பே இருவருக்கிடையில் காதல் மலர காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் Natalie, தனது இரண்டு சகோதரிகளான Natasha மற்றும் Nadege-வை தன்னுடைய காதலரான Luwizoவுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இதையடுத்து மூன்று பெண்களும் ஒன்று சேர்ந்து தங்களின் மனதில் உள்ள காதலை Luwizo-விடம் வெளிப்படுத்தியுள்ளனர். அதோடு அவர்கள் திருமணம் செய்து கொள்ளவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து மூவரின் காதலையும் ஏற்றுக் கொண்ட Luwizo ஒரே மேடையில் மூவரையும் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
மேலும் மூன்று சகோதரிகளில் ஒருவர் இந்த திருமணம் குறித்து பேசியதாவது, நாங்கள் சிறு வயதில் இருந்தே அனைத்தையும் சரிசமமாக பகிர்ந்து கொண்டு வருகிறோம். அதுபோல் கணவரை மூவரும் பகிர்ந்து கொள்வது என்பது எங்களுக்கு கடினமாக இல்லை என்று கூறியுள்ளார்.