ஒரு வாரம் சடலத்துடன் வசித்து வந்த நபர்! உயிருக்கு பயந்து கணவர் செய்த செயல்.. அதிர வைக்கும் சம்பவம்
அமெரிக்காவில் ஒருவர் தனது மனைவியை கொலை செய்து ஒருவாரம் சடலத்துடன் வசித்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் michigan பகுதியை சேர்ந்தவர் Charles Sherwood(47). இவருக்கும் Susan Clubs என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் பயங்கர வேகமாக பரவி வருகிறது.
இதனால் இந்த தம்பதிக்கு பயம் ஏற்பட்டுள்ள நிலையில் கணவன், மனைவி ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து தனது மனைவியை Charles Sherwood கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
அதன் பின்னர் அவரும் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அவர் பயத்தில் தன்னுடைய மனைவியின் சடலத்துடன் சுமார் ஒரு வாரம் காலம் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதி இருவரும் ஒரு வாரத்திற்கு மேலாக வெளியே வரவில்லை என்று காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகாரின் பெயரில் காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது Charles Sherwood படுக்கை அறையில் தன்னுடைய மனைவியின் சடலத்துடன் அமர்ந்துள்ளார். அதைத் தொடர்ந்து அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரண செய்துள்ளனர்.
அதில் அவர் கொரோனாவிற்கு பயந்து அவர்கள் போட்டிருந்த தற்கொலை திட்டத்தை கூறியுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததையடுத்து அவருக்கு 38 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அறிவித்துள்ளார்.