பிரான்சில் புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு செய்தி
புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் உரிமைகளை மட்டுப்படுத்தும் வகையிலான, அச்சுறுத்தும் புலம்பெயர்தல் சட்ட வரைவை பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு செய்து வருவதாக, மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஒன்று இன்று தெரிவித்துள்ளது.
இன்று முதல் செனேட்டில் விவாதம்
இன்று, அதாவது, 2023ஆம் ஆண்டு, நவம்பர் 6ஆம் திகதி துவங்கி, அந்த வரைவுச் சட்டம் பிரான்ஸ் செனேட்டில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும் அது டிசம்பரில் தேசிய சட்டமன்றத்தின் முன் கொண்டுவரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் இந்த மசோதா பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால், மார்ச் மாதத்தில், நாடாளுமன்றத்தில் அதற்கு ஆதரவு இல்லாததால் விவாதம் ஒத்திவைக்கப்பட்டது.
பல குறைபாடுகள் கொண்ட அந்த புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளை பிரான்ஸ் அதிகாரிகள் மீண்டும் முன்வைக்க முயற்சிக்கின்றனர் என்று கூறும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் மூத்த ஐரோப்பிய ஆய்வாளரான Eva Cossé. குடும்பங்களைப் பிளவுபடுத்துவதும், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான உரிமைகளை நீர்த்துப் போகச் செய்வதும் நாட்டின் பாதுகாப்புக் கவலைகளுக்கு தீர்வாகாது என்கிறார்.
மசோதாவில் கீழ்க்கண்ட கவலைக்குரிய விடயங்கள் உள்ளன:
பிரான்சை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்ட வெளிநாட்டினர் மற்றும் வலுக்கட்டாயமாக அகற்றப்படுபவர்களுக்கு என இருக்கும் பாதுகாப்புகளை பலவீனப்படுத்துவதற்கான விடயங்கள்.
நாட்டின் கொள்கைகளுக்கு இணங்காத ஒரு நபருக்கான குடியிருப்பு அனுமதியை திரும்பப் பெறுதல் அல்லது புதுப்பிக்க மறுப்பதற்கான விடயம்.
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான மேல்முறையீட்டு உரிமைகளையும் புலம்பெயர்ந்தோர் தொடர்பான நிர்வாக நடைமுறைகளையும் பலவீனப்படுத்துவதற்கான விடயம்.
Julien Mattia / Anadolu Agency / via picture-alliance
16 வயதிற்குட்பட்ட புலம்பெயர்ந்த குழந்தைகளின் தடுப்புக்காவலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு வரையறுக்கப்பட்ட விதியைச் சேர்த்தல், இந்த விதியால் பிரெஞ்சு வெளிநாட்டுப் பிரதேசங்களில், குறிப்பாக Mayotte மற்றும் எல்லைகள் அல்லது விமான நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பாதுகாப்புக்கு சிக்கல் உருவாகும்.
அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் முதல் பல்வேறு பாதகமான விடயங்கள்
தற்போதுள்ள சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டவராக இருக்கும் ஒரு நபரைக்கூட, பிரெஞ்சு பிரதேசத்தை விட்டு வெளியேற்றுவதற்கான உத்தரவை வழங்க அதிகாரிகளுக்கு இந்த வரைவு சட்டம் உதவும்.
மேலும், பிரான்சில் ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டவிடயத்தை மேற்கோள் காட்டி, தீவிர கோட்பாடுகளுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் வெளிநாட்டினரை நாடு கடத்துவதை எளிதாக்குவதற்கு, அரசு, மற்றொரு விதியை இந்த மசோதாவில் சேர்க்க விரும்புகிறது என்பதை பிரான்ஸ் உள்துறை அமைச்சரின் நடவடிக்கைகள் காட்டுகின்றன.
மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கையைக் குறைத்தல், மேல்முறையீடுகளின் எண்ணிக்கையைக் குறைத்தல் என மேலும் பல புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு பாதகமான விடயங்கள் இந்த மசோதாவில் உள்ளன.
ஆக, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரான்சுக்கு என்ன புலம்பெயர்தல் சீரமைப்புகள் தேவை என்பதில் கவனம் செலுத்தவேண்டுமேயொழிய, மனித உரிமைகளை திருப்பி எடுத்துக்கொள்ளுதல், பிரான்சை பாதுகாப்பானதாக ஆக்காது என்கிறார் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் மூத்த ஐரோப்பிய ஆய்வாளரான Eva Cossé.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |