HMD Global புதிய நோக்கியா தயாரிப்பு: Nokia Sage குறித்து வெளியான முக்கிய கசிவுகள்
நோக்கியா பிராண்ட் ஸ்மார்ட்போன்களின் தாயகமான HMD Global தனது புதிய நடுத்தர விலை ஸ்மார்ட்போனான Nokia Sage-ஐ அறிமுகப்படுத்தப்பட தயாராகி வருகிறது.
X தளத்தில் வெளியான நம்பகமான கசிவு மூலம், நமக்கு Nokia Sage ஸ்மார்ட்போன் குறித்த விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பு குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது.
முக்கிய விவரக்குறிப்புகள்
திரை: 90Hz புதுப்பிப்பு விகிதத்துடன் 6.55-இன்ச் Full HD+ OLED திரை கொடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயலி: Nokia Sage ஸ்மார்ட்போனில் Unisoc T760 பொருத்தப்பட்டு இருக்கலாம்.
1000 டன் வெடிக்கும் பொருள்..!ரஷ்யாவின் மிதக்கும் வெடிகுண்டு பிரித்தானிய துறைமுகத்தில் நிறுத்தி வைப்பு
கேமரா: இரட்டை 50MP பின்புற கேமராக்கள் கொடுக்கப்பட்டு இருக்கலாம்.
பற்றரி: 33W வேகமாக சார்ஜிங் அம்சமாக இருக்கலாம் ஆனால் பற்றரி திறன் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.
மற்ற அம்சங்களாக IP52 தரநிலை, ஹெட்போன் ஜாக் மற்றும் NFC அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
வடிவமைப்பு
Sage-யின் வடிவமைப்பு சமீபத்தில் வெளியிடப்பட்ட நோக்கியா Skyline-லிருந்து ஈர்க்கப்பட்டுள்ளது.
பாலிகார்பனேட் உடலுடன் பின்புறத்தில் மேட் பூச்சுடன்(matte finish) உள்ளது.
இருப்பினும், Skyline-ல் காணப்படும் மூன்று கேமரா மாட்யூலுக்கு பதிலாக இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
ஸ்மார்ட்போன் பச்சை, நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் வரக்கூடும் என்று வதந்தி மூலம் தெரிய வருகிறது.
HMD Global இன்னும் அதிகாரப்பூர்வமாக Sage அறிவிக்கவில்லை என்றாலும், கசிவு அதன் வெளியீடு விரைவில் இருக்கலாம் என்று கூறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |