வெளிநாடொன்றில் மாயமான இந்தியப் பெண்: பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்
அமெரிக்காவில் வாழும் இந்தியப் பெண்ணொருவர் மாயமாகியுள்ள நிலையில், அவரைக் கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களுடைய உதவியை நாடியுள்ளார்கள்.
யார் அந்தப் பெண்?
Ferin Khoja என்னும் 25 வயது இந்தியப் பெண்ணே காணாமல் போயுள்ளார். அவர், இம்மாதம், அதாவது, மார்ச் மாதம் 1ஆம் திகதி, இரவு 11.00 மணியளவில்,நியூயார்க்கிலுள்ள Queens பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அதற்குப் பின் அவரைக் காணவில்லை.
Unsplash
நியூயார்க்கிலுள்ள இந்திய தூதரகத்துக்கு Ferin காணாமல்போனது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைக் கண்டுபிடிக்க பொதுமக்களுடைய உதவியை பொலிசார் நாடியுள்ளார்கள்.
முக்கியமான விடயம் என்னவென்றால், Ferin, bipolar disorder என்னும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர் என்பதுதான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |