வங்கக்கடலில் மீண்டும் உருவாகும் புதிய காற்றழுத்தம்.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்தம்
தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மழையின் தீவிரம் அதிகரித்துள்ளது.
இதனிடையே, கடந்த 14 -ம் திகதி அன்று வங்கக்கடலில் உருவான கற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்தது. இதனால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
ஆனால், காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆந்திரா நோக்கி நகர்ந்ததால் ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது. பின்னர், இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காலை நெல்லூர் அருகே கரையை கடந்தது.
இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, அந்தமான் கடல் பகுதிகளில் 20 -ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகவுள்ளதாகவும், இந்த வளிமண்டல சுழற்சி 22 -ம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், தமிழகத்திற்கு மீண்டும் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |