சுற்றுலா பார்வையாளர்களுக்கு 7% வரி! ஸ்காட்லாந்து நகரமொன்றின் புதிய நடைமுறை
ஸ்காட்லாந்தின் அபெர்டீன் நகரில் சுற்றுலா பயணிகளுக்கு 7% வரி விதிக்கும் புதிய நடைமுறைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பார்வையாளர்களுக்கு 7% வரி
ஸ்காட்லாந்தின் அபெர்டீன் நகருக்கு வரும் சுற்றுலா பார்வையாளர்களுக்கு 7% என்ற புதிய வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு நகரின் கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இருப்பினும் இந்த புதிய வரி திட்டமானது, 2027 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மில்லியன் பவுண்ட் வருமானம்
இந்த புதிய வரி நடைமுறையின் மூலம் பல மில்லியன் பவுண்ட் வருமானம் ஈட்டப்படும் என்றும், இதனால் வரும் லாபம் நகரின் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அபெர்டீன் நகர சபை அளித்த அறிக்கையில், நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் இரவு தங்குவதற்கான விலை சுமார் £70 எனில், புதிய வரி விதிப்பின் காரணமாக சுற்றுலா பார்வையாளர்களுக்கு கூடுதலாக £4.90 செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல்கள், படுக்கை மற்றும் காலை உணவு விடுதிகள், விருந்தினர் இல்லங்கள், கேரவன் பூங்காக்கள், மற்றும் நீண்ட நாள் நிறுத்தப்பட்ட கப்பல்கள் இந்த வரித் திட்டத்திற்கு கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரியில் இருந்து விலக்கு
மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெறுவோர், கப்பல் பயணிகள் மற்றும் மோட்டார் அறையில் தங்குபவர்கள் ஆகியோருக்கு இந்த புதிய வரித் திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |