12 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த ஒருவர்.., இரண்டு முறை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி
12 ஆம் வகுப்பு முதல்நிலைத் தேர்வில் தோல்வியடைந்த ஒருவர் இரண்டு முறை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளார்.
இரண்டு முறை தேர்ச்சி
இந்திய மாநிலமான பீகாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி குமார் அனுராக். இவர் இடைநிலை மற்றும் பட்டப்படிப்பு படிப்பின் போது சில பாடங்களில் தோல்வி அடைந்தாலும் தற்போது நல்ல நிலைமையில் உள்ளார்.
8 ஆம் வகுப்பு வரை இந்தி மொழியில் பயின்ற குமார், ஆங்கில மொழிக்கு மாறிய மொழி பிரச்சனைகளை சந்தித்து வெற்றியும் கண்டார்.
10 ஆம் வகுப்பில் 90 சதவீத மதிப்பெண் பெற்ற நிலையில் 12 ஆம் வகுப்பு கணிதப் பாடப்பிரிவுத் தேர்வில் தோல்வியடைந்தார்.
பின்னர் கணிதத்தில் திறமையை வளர்த்துக் கொண்டு இறுதியில் 94 மதிப்பெண்களைப் பெற்றார். இதனால் ஐஐடியில் சேர வேண்டும் என்ற அவரது ஆசைகள் தடைபட்டன.
பின்னர், டெல்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரியில் சேர்ந்தார். இருப்பினும், தனது இளங்கலைப் படிப்பின் இரண்டாம் ஆண்டில் தோல்வியடைந்தார்.
அடுத்ததாக, பட்டம் பெற்ற பிறகு யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் நேரத்திலேயே முதுகலை படிப்பையும் தொடர்ந்தார் குமார் அனுராக்.
இதனால், 2017 ஆம் ஆண்டில் தனது முதல் முயற்சியிலேயே அகில இந்திய ரேங்க் (AIR) 677 உடன் UPSC தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றார்.
இருந்தாலும் IAS அதிகாரியாக வேண்டும் என்ற ஆசையில் UPSC தேர்வை மீண்டும் எழுதி, 2018 இல் 48 AIR மதிப்பெண்களைப் பெற்றார்.
பின்னர், மார்ச் முதல் ஆகஸ்ட் 2019 வரை இந்திய பொருளாதார சேவையில் (IES) உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.
அவரது LinkedIn கணக்கின்படி தற்போது அக்டோபர் 2022 முதல் பாகல்பூரில் துணை மேம்பாட்டு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |