8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்துவந்த நபர்... மீண்டும் பெண் தேடுகிறாராம்!
8 பெண்களை மணந்து ஒரே வீட்டில் வாழ்ந்துவந்த ஒருவர் இப்போது மீண்டும் பெண் தேடுகிறார்.
பிரேசில் நாட்டில் வாழும் Arthur O Urso (36), 8 பெண்களை திருமணம் செய்து, அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வாழ்ந்துவந்த விடயம் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியானது.
ஒவ்வொருவருக்குமாக நேரம் ஒதுக்கி, அனைவருமாக சேர்ந்து ஷாப்பிங் செல்வது என வாழ்க்கை ஆரம்பத்தில் ஜாலியாகத்தான் இருந்திருக்கிறது.
ஆனால், ஒரு பெண், தன் கணவர் தனக்கு மட்டுமே வேண்டும் என விவாதிக்க, கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு அவர் பிரிந்து சென்றுவிட்டார்.
Image: @arthurourso/Instagram
திருமண நாள் கொண்டாட்டங்கள்
சமீபத்தில் தங்கள் திருமண நாளைக் கொண்டாடியிருக்கிறார் Arthur. ஆனால், திருமண நாள் கொண்டாட்டங்கள் முடிந்ததுமே மீண்டும் வீட்டில் விவாதங்கள் உருவாகியிருக்கின்றன.
இதற்கிடையில், அக்கம்பக்கத்தவர்கள் தொடர்ந்து Arthur குடும்பத்தை மோசமாக விமர்சித்துள்ளார்கள். அதனால் அடிக்கடி விவாதங்கள் ஏற்பட்டு, உறவுகளுக்குள் மேலும் பிரச்சினைகளை அதிகரிக்க, தங்களால் இப்படி வாழமுடியாது என மேலும் நான்கு பெண்கள் கூறிவிட்டிருக்கிறார்கள்.
ஆகவே, அவர்கள் சம்மதத்துடன்,அவர்கள் நான்கு பேரையும் விவாரத்து செய்துவிட்டார் Arthur.
மீண்டும் திருமணம் செய்ய விருப்பம்
ஆனால், தான் எட்டு பெண்களை திருமணம் செய்தபோது, அவர்கள் அவ்வளவு பேரும் வசதியாக வாழ்வதற்காக, வீட்டில் பல மாற்றங்கள் செய்து பெரிய படுக்கை அறைகளைக் கட்டியிருந்தார் Arthur.
ஆக, இப்போது மனைவிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், வீடு வெறுமையாக இருப்பது போல உள்ளதாம் Arthurக்கு.
ஆகவே, மேலும் சில பெண்களை திருமணம் செய்வது என முடிவு செய்துள்ளார் அவர்.
Image: @arthurourso/Instagram