கும்பமேளாவில் பக்தர்கள் ஆற்றில் போடும் காணிக்கை மூலம் தினமும் ரூ.4000 சம்பாதிக்கும் நபர்
மகா கும்பமேளாவில் ஆற்றில் பக்தர்கள் விடும் காணிக்கையின் மூலம் நபர் ஒருவர் தினமும் ரூ.4000 சம்பாதித்து வருகிறார்.
தினமும் ரூ.4000 வருமானம்
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இங்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதில் இருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.
தற்போது வரை உலகம் முழுவதும் இருந்து மொத்தம் 40 கோடி மக்கள் திரிவேணி சங்கமகத்தில் புனித நீராடியுள்ளனர்.
இந்நிலையில், நபர் ஒருவர் கும்பமேளாவில் முதலீடே இல்லாமல் தினமும் ரூ.4000 சம்பாதித்து வருகிறார்.
பிரக்யராஜ் பகுதியைச் சேர்ந்த மக்கள் பலரும் பக்தர்கள் ஆற்றில் போடும் காணிக்கையை சேகரிப்பதன் மூலம் குறிப்பிட்ட தொகை ஒன்றை பெற்று வருகின்றனர்.
![தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர்](https://cdn.ibcstack.com/article/e263aa7f-96be-4fdd-b622-39e30e84291e/25-67a6deb6b5243-sm.webp)
தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர்
அந்தவகையில், இளைஞர் ஒருவர் கயிற்றில் காந்தங்களை கட்டி ஆற்றில் விடுகிறார். பின்னர் அவர் கரைக்கு வரும்போது சில்லறை காசுடன் வருகிறார்.
New business unlocked 😎 pic.twitter.com/GRfMU58dEM
— Vijay (@veejuparmar) January 31, 2025
அப்போது அவர் கூறுகையில், இந்த மாதிரி ஆற்றுக்குள் இறங்கி காந்தங்களை விடுவதன் மூலம் நாளொன்றுக்கு ரூ.3000 முதல் ரூ.4000 வரை கிடைக்கும் என்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |