தரையில் விழுந்து பயங்கரமாக வெடித்து சிதறிய விமானம்... சிசிடிவி கமெராவில் சிக்கிய சம்பவம்
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோவிலே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரவு 7.15 மணிக்கு வடக்கு மோலிசன் அருகே விமான் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானம் விழுந்த இடத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என கருதுகின்றனர். ஆனால், விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்ற விவரம் தற்போது வரை தெரியவில்லை.
அதுமட்டுமின்றி, விமானம் எதனால் விபத்துக்குள்ளானது என்பதும் தெரியவில்லை. மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணையை மேற்கொள்ள உள்ளது.
விமானம் விபத்துக்குள்ளான காட்சி அப்பகுதியில் உள்ள வீடென்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
அதில், விமானம் தரையில் விழுந்து பயங்கரமாக வெடித்ததை காட்டுகிறது.
WATCH ? A plane crashed near San Diego. The aircraft clipped a powerline and as a result of the accident hundreds of homes are out of power
— Insider Paper (@TheInsiderPaper) December 28, 2021
pic.twitter.com/JOiDB2kEBx
விமானம் விபத்துக்குள்ளானதில் பல மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியல் கிட்டதட்ட 350 குடியிருப்பாளர்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாக அப்பகுதிவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மின்சார பிரச்சனை செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்குள் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.